Tuesday, March 14, 2006

எனக்குப் பிடித்தவை

சமயங்களில் சில தமிழ் பாட்டைக் கேட்டால் கேட்பதற்க்கு போட்டது போட்டபடி உக்கார்ந்துவிடுவேன். அந்த பாடல் ஆரம்பிக்கும் விதம், வரிகள், இசை, படமாக்கிய விதம், சூழ்நிலை என பல காரணங்கள் அதற்க்கு. என்னை அவ்விதம் உட்கார வைக்கும் மாதிரியான சில பாடல்கள் இங்கே.

1. தாலட்டு மாறி போனது (உன்னை நான் சந்தித்தால்)
2. பிள்ளை நிலா (நீங்கள் கேட்டவை)
3. கடவுள் உள்ளமே கருணை இல்லமே (அன்புள்ள ரஜினிகாந்த்)
4. தேனே தென்பாண்டி மீனே (உதய கீதம்)
5. அம்மா என்றழைக்காத (மன்னன்)
6. ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராப்)
7. பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)
8. கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை)
9. பூங்காற்றே பூங்காற்றே (பாரதி கண்ணம்மா)
10. உன் பேரை சொன்னாலே (டும் டும் டும்)
11. பூவே செம்பூவே (சொல்லத் துடிக்குது மனசு)
12. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)
13. நானாக நானில்லை தாயே (தூங்காதே தம்பி தூங்காதே)
14. உன் குத்தமா என் குத்தமா (அழகி)

15. அவரவர் வாழ்க்கையில் (பாண்டவர் பூமி)
16. தென்பாண்டி சீமையிலே (நாயகன்)
17. என் காதலே காதலே (டூயட்)

18. பூவே பூச்சூடவா (பூவே பூச்சூடவா)
19. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)

இந்த பாடல்கள் ஏன் பிடித்தது என மேலே சொல்லிவிட்டேன். அதைவிட அந்த அந்த காலங்களில் அது என் மனநிலையை பிரதிபலித்திருக்கலாம் என என் நண்பன் சொன்னான். எனக்கு அப்படி தோணவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

7 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

உங்க லிஸ்டில் என் சாய்ஸ் 2,7,8,10.11,15

said...

நன்றி தாணு, உங்களோட ரசனையை பகிர்ந்து கொண்டதற்க்கு.

said...

சில பாடல்கள் பிடிப்பதற்கான காரணங்களை எளிதில் சொல்லி விட முடிவதில்லை.
நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்தான். வருடி விடுவது போன்ற இதமும், தழுவி விடுவது போன்ற சுகமும், சோகம் இழைந்தாலும் மனதைத் தேற்றும் நயமும் கொண்ட பாடல்கள் இவைகள்.

இவைகளில் ஆட்டோகிராப் பில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே... மனதில் தைரியத்தையும் நம்பிக்கையையும் தரக் கூடிய பாடல். எனக்கு மிகவும் பிடிக்கும்.

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

said...

அட, பாட்டேவே போட்டுடீங்களா, நன்றி நன்றி. இந்த பாட்டு வந்து நான் சித்ரா வாய்ஸுக்காக கேட்க ஆரம்பித்து வரிகள், இசை என எல்லாமெ பிடித்துப் போய் விட்டது.

said...

padalkalin varikalum,Antha padalin Soolnilaiyummea namaku pedeka karanam endru naan ninaikerein.

said...

Poo poothadhu thottam yaar pottadhu - mumbai xpress

pidikaliyaaa????

varigal arumai.... female voice super

said...

mm i agree ur friends view and tightly believe personally.
if a person is techically sound( musicwise either carnatic or wester or water ) then his liking is biased to his understanding.

on top of liking of song truely couples with your mindset, mood, environment. This is the core gist of Hindustani raga classification. Hindustani taxonomy's primary rule is categorize the raaga /thala based on time/mood. morning ragas, eveining ragas, rain raga are some famous examples.

ur choices shows ur a nice person. ice illa thalai va ethu i felt and told thats it.