Wednesday, March 01, 2006

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் மேல் எனக்கு தீறாக் காதல் பிறந்தது என் 11வது வயதில். என் பாட்டிக்கு படித்துக் காட்டுவற்காக முதல் முறை உட்கார்ந்தது முதல் இன்று வரை 5 முறை முழுதாக படித்து விட்டேன். ஆனால் அதன் மீதான மோகம் மட்டும் இன்னும் தீரவில்லை. என் அக்காள் மகளுக்கு நந்தினி என்று பெயர் நான் சொல்லிய பொழுது எனக்கு அது உரைக்கவில்லை.

4 ஆண்டுகள் கழித்து என் அக்காவுக்கு பையன் பிறந்த பொழுது பெயர் தேடச் சொன்னார்கள். அப்பொழுது என் அக்கா "டேய், பழுவேட்டரையன், ஆதித்தன், அருள் மொழி, வந்தியத் தேவன் என பெயர் சொல்லிவிடாதே" என சொல்லிய பொழுதான் பொன்னியின் செல்வன் மீதான என் காதல் உரைத்தது.

அருள் மொழி தேவன் பெரியவனா இல்லை வந்தியத் தேவன் பெரியவனா என என்னால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லை. நந்தினி அழகில் சிறந்தவளா, இல்லை குந்தவையா என இன்னும் முடிவு செய்ய முடியவில்லை.

All the credits goes to kalki!!!! Today, I was browsing through the blog திண்ணை அரட்டை and this came to my mind. நன்றி சுபா அவர்களே!!!

Also, வரலாறு is having details about the tamil history. You might be interested in it. This also I got from the திண்ணை அரட்டை only.

I have already posted an incident about my Ponniyin selvan book hunt in Bangalore

4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

//"டேய், பழுவேட்டரையன், ஆதித்தன், அருண் மொழி, வந்தியத் தேவன் என பெயர் சொல்லிவிடாதே"//

:-))

நல்லா இருக்கையா உமது பொ.செ மீதான காதல்...

பொன்னியின் செல்வன் பற்றிய நம்ம பதிவையும் கொஞ்சம் பாருங்க...

நன்றி...

அன்புடன்
கார்த்திகேயன்

said...

ஏற்கனவே நந்தினி என்று பெயர் சூட்டியதின் விளைவுதான் மேற் சொன்ன பதட்டத்தின் காரணம்.

said...

பொன்னியின் செல்வன் எனக்கும் மிகவும் பிடித்த புதினம். தமிழ்ப் படிக்கும் பழக்கமுடையவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் புதினம்.

said...

பழுவேட்டரையன், வந்தியத் தேவன் அப்படீன்னு இந்த காலத்தில் பெயர் வைக்க முடியுதோ இல்லையோ, atleast, ஆதித்த கரிகாலன், அருள் மொழி வர்மன் அப்படீன்னு கண்டிப்பா பெயர் வைக்கலாம். தப்பில்லை.

நம் குழந்தைகளுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம், அவர்கள் வளரும் பொழுது அந்த பெயர் காரணம் அவர்களுக்கு புரிய வைத்தால் போதுமானது. "குந்தவை" என்னும் பெயர் ஏதோ சென்னை செந்தமிழ் போல இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தை பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமோ?

சிறு வயதில், ஐஸ்வர்யா என்ற பெயர் எனக்கு என்னடா பெயர் என்று தோன்றும். ஆனால் ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகு எத்தனை குழந்தைகளுக்கு அந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது...

சீனு.