Friday, March 10, 2006

கருவாச்சி காவியம்

கருவாச்சி காவியத்துக்கு கிடைத்த வரவேற்ப்பைப் பார்த்து அசந்து போய்விட்டேன். மொத்தமே 2 கமெண்ட், அதில ஒன்னு நான் போட்டது.எண்ணெயை தேச்சுட்டு மணலில் புரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும். ஒரிஜினல் கருவாச்சி காவியத்துக்கு இதனால் பெரும் இழுக்கு நேரும் என நினைத்து அட போடா, இதெல்லாம் ஒத்து வராது என கருவாச்சி காவியத்தை மூட்டை கட்டி விட்டு நான் உண்டு என் எக்ஸாம் உண்டுன்னு படிக்கப் போயிட்டேன்.

அப்புறம்தான் யோசித்தேன், கஜினி 17 முறை படையெடுதிருக்கான். விக்கிரமாதித்தன் இன்னும் வேதாளத்தை பிடிச்சானேனு தெரியலை, சிந்துபாத் கன்னித் தீவை வீட்டு வெளிய வந்தானானு இன்னும் தெரியல. ஆனா அவங்க இன்னும் டிரை பண்ணிட்டு இருக்காங்கன்னு பாட்டிகள் கதை சொல்லிட்டும், சன் டிவியில் தொடராவும் வந்துட்டு இருக்கு. அதெல்லாம் விட, 26 வருஷமா மாட்டாத ஃபிகர் இன்னைக்கு மாட்டிரும் நாளைக்கு மாட்டிரும்ன்னு நாக்கை தொங்கப் போடாமல் இன்னும் தேடும் நான் இல்லை என என் மனசாட்சி சொல்லி என்னை உசுப்பேற்றி விட்டது.

அது மட்டும் இல்லாமல் கூடவே சுத்தும் இன்னொரு மனசாட்சியும் எத்தனைதான் பொண்ணை பார்த்தாலும் புதுசா ஒரு பொண்ணு வந்தா நீ என்ன பார்க்காமல போற? ஃபிகரா இல்லையாங்கறது எல்லாம் அப்புறம் என தத்துவம் சொல்லியது. அதானே, ஒருத்தரும் பின்னூட்டம் எழுதலை அப்படிங்கறதுக்காக யாரும் படிக்காம இல்லைன்னு நானே என்னை தேற்றிக்கொண்டேன். இப்போதைக்கு நான் கருவாச்சி காவியம் எழுதப் போவது இல்லை ஆனால் கட்டாயம் எழுதி முடிப்பேன் என சபதம் செய்துள்ளேன்.

பின்குறிப்பு:- கதையை எப்படி நகர்த்துவது என தெரியாமல் நட்டுக்கிட்டு நிக்குதுன்னும் பையன் இன்னும் கதாநாயகி பெயர் வைக்க முடியாமல்தான் கதை எழுதவில்லைன்னு யாரவது சொன்னா தயவு செய்து நம்பாதீங்க.

5 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

அன்பரே,

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கதை எழுதுவது சுலபமன்று. நானும் ஒரே ஒரு முறை முயற்சித்து மூக்கு உடைபட்டு, அமைதி காத்து வருகிறேன். பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. ;)

உங்கள் கதை படிக்கவில்லை. ஆனால் இந்த இடுகையைப் படித்தேன்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள். :)

said...

நன்றி ஸ்ருசல், உங்கள் பின்னூட்டம் நல்ல தெம்பை தருகிறது. மூக்கே போனாலும் எழுதுவதை மட்டும் நிறுத்துவது இல்லை என முடிவு செய்துவிட்டேன்.

said...

உதயகுமார்..

இன்னும் உங்கள் கருவாச்சி காவியத்தை படிக்க வில்லை.. இங்கு வரும்போது பெயர் மட்டும் படித்துவிட்டுச் செல்வேன்... (நாலு பாகம் எழுதிட்டிங்க போல) சமயம் கிட்டும்போது படித்து கருத்து சொல்கிறேன்.

உங்கள் படையெடுப்பைத் தொடருங்கள்..

அப்புறம் நீங்க.. அதான் உங்க மனசாட்சி.. இந்த சிலந்தி வலை பத்தி ஏதும் சொல்லலையா :)

அன்புடன்
கீதா

said...

there may be may ppl like me who just read, but no feedback and all... so keep writing...
i came to ur blogspot from tj's link..
u may remember me, i'm subbu. was with u in mlr training..

said...

Thanks Subbu... I remember you very well. I will start writing after sometime.