Wednesday, March 01, 2006

தமிழ்நாடும் அதன் தலையெழுத்தும்

தமிழ் மக்களுக்கு மூளையே இல்லை என்று இந்த அரசியல்வாதிகள் நினைத்து விட்டார்கள் போலும். வெற்றி கொண்டான் என்ற தி.மு.க. பேச்சாளர் பல்லடத்தில் போன வாரம் பேசிய பேச்சு விகடனில் வந்திருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு.
தமிழ் நாட்டை கலைஞருக்கு மீட்டுக் கொடுப்பதாம். நாடு இவர்களுக்கா, இல்லை நாட்டுக்கா இவர்களா? அனைத்து மத்திய அரசு விளம்பரங்களிலும் கலைஞர் தவறாமல் இடம் பெருகிறார். இவர் என்ன மத்திய அமைச்சரா இல்லை, தமிழ் நாட்டில் தான் இவர் முதலமைச்சரா? பகுத்தறிவு பகுத்தறிவு என மேடை தோறும் முழங்கிவிட்டு தங்களது சொந்த தொலைக்காட்சியில் காட்டுவதெல்லாம் வேலன், சூலம், வேப்பிலைக்காரி போன்ற ஒன்றுக்கும் உதவாத, மூட நம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் மட்டுமே.

தமிழ்க்குடிதாங்கியின் பேரப் பிள்ளைகள் படிப்பதோ ஆங்கிலப் பள்ளியில். ஆனால் இவர் ஆங்கில பதாகைகளை தார் பூசி அழிக்கிறார் திண்டிவனத்தில்.வட மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி ரோட்டில் போட்டதில் கின்னஸ் சாதனை செய்தவர்கள் இவர்கள்.

அம்மா மட்டும் என்ன சும்மாவா? தமிழ் நாட்டில் வெற்றி பெற்றதற்க்கு நன்றிக் கடன் குருவாயூர் கோயிலுக்கு யானை. தமிழ் மக்களுக்கோ வரிச் சுமையும் வேலை இழப்பும்தான்.

வேலை நிறுத்தம் மற்றும் உண்டியல் குலுக்க மட்டும் செய்யத் தெரியும் இடது சாரி கட்சிகளுக்கு.

இதை எல்லாம் பார்த்தும் எதையும் மாற்ற முடியாத நிலைமையில் நான் என நினைக்கும் பொழுதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

அந்த பேச்சுக்கு ஆதரவாக ஆர்பரித்த விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கும் வரையிலும், இதை கண்டிக்காமல், வெறும் செய்தியாக மட்டும் வெளியிடும் ஊடகங்கள் இருக்கும் வரையிலும் இதே நிலமை தொடரும்...

said...

இந்த முட்டாள்தனத்தை நானும் படிக்க நேர்ந்தது. விகடன் கூட இதை ஒரு கவரேஜ் ஆக மட்டுமே வெளியிட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் உண்மையை பேசிவிட்டார் சிறிதுகூட கூச்சப்படாமல். இன்றைக்கு இதை தட்டிக்கேட்க இருக்கும் ஒரே ஆள் விசயகாந்த் மட்டுமே...

said...

படித்த நாம் அனைவரும், "என் அப்பன் இந்தக் கட்சி, அதனால ஓட்டுப் போடுறேன், இவன் என் ஜாதி, அதனால ஓட்டுப் போடுறேன்" என்று சொல்லாமல் சுயமாக சிந்தித்து, மக்களுக்கு நல்லது செய்யும் ஒருவனுக்கே ஓட்டுப்போடும் நிலை வரவேண்டும்.

அந்த நன்னாளில் நாம் நினைக்கும் எல்லாமே நடக்கும்.

said...

arasiyalla idhellam!!
BTW machchi, i had just arrived into bangalore and was in taxi from the airport and you know what, mistakingly called the girl u mentioned here.