Tuesday, February 21, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 3

கெமிஸ்டிரி லேபில் பொங்கல் வைத்ததற்க்குப் பின்னால் லேப்க்கு போவதுன்னா சின்ன ராசுவுக்கு முதலில் பயமாக இருந்தாலும் அங்கே மட்டும்தான் நின்று நிதானமாக ஃபிகர்களை சைட் அடிக்க முடியும் என கண்டுபிடுத்து வைத்திருந்தான். Physics புரொஃபசர் வெங்கடாசலம் பக்கத்து ஊர்க்காரராய் இருந்ததால் நன்றாக சோப்பு போட்டு வைத்திருந்தான். அவர் மிக அற்புதமாக வகுப்பு எடுத்தாலும் லேபில் எல்லோருக்கும் எட்டிக்காயாய் இருந்தார்.

நண்பர்கள் எல்லோருக்கும் சின்ன ராசு பண்ணும் கூத்து தெரிந்து இருந்தாலும் புரொஃபசர்க்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். அன்புவுக்கு மட்டும் இதை கேட்டதற்க்கு அப்புறம் சும்மா இருக்க முடியவில்லை. தமிழில் இது வரைக்கும் நடித்த அனைத்து கதாநாயகிகளுக்கும் ஒரு நாளவது ரசிகனாக இருந்திருக்கிறேன். கூட படிக்கிறவங்களை சைட் அடிக்காமல் விட்டால் அவர்களது சாபம் என்னை சும்மா விடாது என்றான்.

ஸ்பெக்ட்ரோ மீட்டர் எக்ஸ்பெரிமென்ட் என்றாலே எல்லோரும் நடுங்குவார்கள். அதில் சிலிட்டை தேடி கண்டுபிடிப்பதற்க்குள் பாதி உயிர் போய் விடும். அன்புவுக்கு வகையாக அது வந்து மாட்டியது. ஸ்பெக்ட்ரோ மீட்டரை செட் அப் செய்கிறேன் என்று பாதி நேரம் சிந்துவையும் சுமதியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். சின்ன ராசு நீ உண்மையிலேயே என் கண்ணை திறந்து விட்டாய் என நடுவில் வந்து பாராட்டு பத்திரம் வாசித்து சென்றான்.

அந்த சமயத்தில் அன்புவின் கெட்ட நேரம் ஸ்பெக்ட்ரோ மீட்டர் மேல் ஏறி கால் மேல் கால் போட்டு உக்கார்ந்து கொண்டு புரொஃபசரை அங்கு வர வைத்திருந்தது. அவர் பேச ஆரம்பிததால் மற்றவர்களுக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கும். ஆனால் பதில் சொல்பவர்க்களுக்குத்தான் பாதி உயிர் போய் விடும். என்னப்பா, சிலிட் தெரியுதா என அவர் கண்ணாடியை துடைத்துக் கொண்டே கேட்டார். இவனும் தெரியுது சார் என்றான்.
என்னுடைய 25 வருட சர்வீசில் லைட் போடாமல் ஸ்பெக்ட்ரோ மீட்டரில் சிலிட் பார்த்தவன் நீதான் என்றார். அன்புவுக்கு அப்பொழுதுதான் உரைத்தது சைட் அடிக்கும் மும்மரத்தில் செட் அப் செய்யவே இல்லை என்று. இவன் சைட் அடித்துக் கொண்டிருந்ததை அவர் கவனித்து விட்டார். நீ மட்டும் வாழ்க்கையில் உருப்பட்டு விட்டால் எங்கிருந்தாலும் வந்து சொல்லு என் பேரை மாற்றிக் கொள்கிறேன் என சவால் விட்டார்.

அன்பு, எல்லோருக்கும் சான்ஸ் கிடைக்கததால்தான் இன்னும் நிறைய பேர் நல்லவங்களாக இருக்காங்க. அதனால நீ இதை எல்லாம் மனசுல வச்சுக்காதே என எல்லாம் கரைத்துக் குடித்தது மாதிரி உபதேசம் பன்னினான் சின்ன ராசு. நாளைக்கு நாம சிந்து மேல ராக்கெட் விடுவோம் என அன்பு அடுத்த சவாலுக்கு ரெடியானான். அன்பு, நீ மட்டும் கரெக்டா ராக்கெட் விடல அது பக்கதுல இருக்கற தனலட்சுமி மேல விழும். தனலட்சுமியோட அண்ணன் ஃபைனல் இயரில் பெரிய ரவுடியாம். அப்புறம் உன்பாடு திண்டாட்டம்தான் என சின்ன ராசு எச்சரித்து வைத்தான்.

நினைத்தது போலவே அன்பு தனலட்சுமி மேல் ராக்கெட் விட்டு தொலைக்க ஒரு வாரம் முழுவதும் தனலட்சுமியின் அண்ணன் அடித்து விடுவான் என்று பேயடித்த மாதிரி திரிந்தான்.

- தொடரும்.

0 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!: